Friday, November 16, 2007

ஸ்மைல் பிலீஸ்

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,
'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.
********************************************************************************
பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா. அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மாஅம்மா: கெட்ட செய்திபையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

மிஸ்டர் X ஜோக்(மிஸ்டர் X மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிறமிஸ்டர்X : எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.மிஸ்டர்X : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம்
மிஸ்டர்X: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது
ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன்
*************************************************************************************
நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
**********************************************************************************************************




.

செம கடி

அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!
-----------------------------------------------------------------------
அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?
-----------------------------------------------------------------------
அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
விமலா : எதை வைத்து?
அமலா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
-------------------------------------------------------------------------
அமலா : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
விமலா : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
அமலா : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
--------------------------------------------------------------------------
அமலா : அவர் கோயிலுக்கு போகும் போது பாய்ந்து பாய்ந்துதான் போவார்..
விமலா : ஏன்?
அமலா : அவர்தான் பக்திமான்-ஆச்சே..
---------------------------------------------------------------------------
அமலா : உங்க மாமா டெல்லியில் என்னவா இருக்காரு..?
விமலா : அங்கேயும் எங்க மாமாவாதான் இருக்காரு..
---------------------------------------------------------------------------
அமலா : "என்ன உன் கணவர் தூக்கதுல 'ஹலோ.. ஹலோ..'ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி பேசறாரு?"
விமலா : "நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல 'கால்' போட்ற பழக்கம் இருக்குன்னு."
---------------------------------------------------------------------------
விமலா : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?
அமலா : இல்லடா.. ஆனா பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்.
---------------------------------------------------------------------------
அமலா : பைனான்ஸ் கம்பெனிக்காரரைக் காதலிச்சது தப்பாய் போச்சு!விமலா : ஏன்?அமலா : எங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் ஓடிப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறார்.
---------------------------------------------------------------------------
அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!
விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.
---------------------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?அமலா : எப்டி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
---------------------------------------------------------------------------
அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க?
விமலா : அப்பத்தான்டி என் புருசன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு.
---------------------------------------------------------------------------
அமலா : பத்திரிக்க ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப் போச்சு.
விமலா : ஏன் ?
அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார்.
---------------------------------------------------------------------------
அமலா : என் மாமியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
விமலா : எப்படி?
அமலா : கரெக்டா அரை மணி நேரத்துக்கு மேல சண்டைய நீடிக்க மாட்டார்.
---------------------------------------------------------------------------
அமலா : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்டை போடுவாங்க
விமலா : ஏன்?
அமலா : அப்பதான் ஜெயிக்க முடியும்னு அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்ல சொன்னாங்களாம்.
---------------------------------------------------------------------------
அமலா : புகுந்த வீட்டுல பெண்கள மதிக்க மாட்டேங்குறாங்க .
விமலா : என்ன செய்றாங்க?
அமலா : மாமியார் மருமக சண்டைக்கு வாய்ப்புக் குடுக்காம எந்நேரமும் அப்பாவும் மகனும் சண்டை போடுறாங்க.
---------------------------------------------------------------------------
அமலா : "என் புருசனுக்கு ரொம்ப நல்ல மனசு"
விமலா : "எத வச்சு சொல்ற?"
அமலா : "சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வச்சு தான்."
---------------------------------------------------------------------------
விமலா : "என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு"
அமலா : "ஏன்?"
விமலா : "வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்".

நன்றி --தமிழ்மொழி

Wednesday, October 24, 2007

பீர்பால் கதைகள்

பீர்பால் புகையிலை
> > > > பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
> > > > ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.
> > > > அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது. இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.
> > > > அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா? நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.
> > > > உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, "அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!
> > > > தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை .

என்னையும் மக்கள் பண்டிட்ஜி னு கூப்பிடனும்
ஒரு தடவை பீர்பால் கிட்ட சேவாராம் அப்படீங்கரவர் வந்து '' என்னோட அப்பா, தாத்தா இன்னும் அவங்க தாத்தா எல்லாம் பெரிய சமஸ்கிருத பண்டிட்...அவர்ங்களை எல்லாம் அவங்க காலத்துல மக்கள் 'பண்டிட்ஜி' ன்னு கூப்பிடுவாங்க. இப்ப என் கிட்ட எந்த காசோ, பணமோ இல்லை. அது எனக்கு வேண்டாம், ஆனா அவங்களை எல்லாம் கூப்பிட்ட மாதிரி என்னையும் மக்கள் பண்டிட்ஜி னு மக்கள் கூப்பிடனும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்கன்னு சொன்னாராம்''.
அதுக்கு பீர்பால் சரி அப்ப நான் சொல்றபடி செய்யுங்க. எல்லாரும் உங்களை பண்டிட்ஜீன்னு கூப்பிடுவாங்கன்னு சொன்னாராம். உங்களுக்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது ன்னு எல்லார்க்கும் தெரியற மாதிரி பண்ணீருங்க அப்புறம் பாருங்கன்னு சொன்னாராம்.
அப்புறம் பீர்பாலும் சேவாராம் இருந்த தெருவுல இருக்குற குழந்தைகள் கிட்ட சேவாராம்க்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது, அதனால யாரும் அவரை கூப்டாதீங்கன்னு சொன்னாராம். ஆனா குழந்தைகள் அதுக்கு அப்புறம் சேவாராம பண்டிட்ஜீன்னே கூப்பிட..சேவாராமும் அவருக்கு அப்பிடி கூப்ட்டா பிடிக்காத மாதிரி திட்ட ஆரம்பிச்சாராம். அதுக்கு அப்புறம் அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாரும் அவரை அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
அவங்க கூப்பிட்டது சேவாராமுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் irritate பண்றதுக்காக. சேவாராமுக்கு எப்படியோ அவரை பண்டிட்ஜினு கூப்ட்டா போதும்னு

உலகம் ஓர் சத்திரம்
ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.
அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.
வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.
"என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?" என்று அதட்டினார்.
"ஓஹோ... இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!" என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.
தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.
"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!" என்று கடிந்தார் மன்னர்.
"மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!" என்றார் பீர்பால்.
"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!" என்றார் மன்னர்.
"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"உமது தந்தையார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?"
"இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!"
"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!" என்றார் பீர்பால்.
பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!
"தாங்கள் யார்?" என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.
"என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!' என்று பதில் சொன்னார் பீர்பால்.
"அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார் அரசர்.
அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்!

விலை உயர்ந்த பொருள்
ஒருமுறை இரவில் நகர்வலம் வருவதற்காக அக்பர் ஒரு கொள்ளைக் காரனைப்போல மாறுவேடம் அணிந்தார். கண்ணாடியில் தனது உருவத்தினை பார்த்தார். அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவரின் உருவ தோற்றத்தினை வைத்து யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சரியாக அமைந்திருந்தது அந்த வேடம்.
நள்ளிரவு நேரத்தில் பீர்பாலையும் துணைக்கு அழைத்துச் சென்றால் தேவலாம் என நினைத்தார் அக்பர். என்றாலும் பீர்பாலிடம் தான் யாரென்று சொல்லாமல் விளையாடிப் பார்க்க அவருக்கு ஆசை வந்தது.
நள்ளிரவு நேரத்தில் அவர் பீர்பால் வீட்டுக் கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்த பீர்பால் யார் என்று தெரியாமல் ஒருகணம் தடுமாறினார். பிறகு நிதானித்துப் பார்த்தபோது அவருக்கு வந்திருப்பது யார் என்று விள்ளங்கி விட்டது.
அக்பர் தன் குரலை மாற்றிக் கொண்டு, "உன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விடு. இல்லா விட்டால் கொலை செய்து விடுவேன்!" என்று மிரட்டினார்.
பீர்பால் சிரித்துக் கொண்டே, "மன்னர் அவர்களே, என்னிடம் விலை உயர்ந்த பொருள் என்றால் அது எனது உள்ளம்தான். அதையும் ஏற்கெனவே தாங்கள் கொள்ளையிட்டு விட்டீர்கள். அது இருக்கட்டும். மிக சாமானியமான பீர்பாலைச் சந்திக்க தாங்கள் ஏன் மாறுவேடம் அணிய வேண்டும்? சுய உருவத்துடன் என்னைச் சந்திக்க மன்னர் அவர்களுக்கு அச்சமா என்ன?" என்று கேட்டார்.
"பீர்பால்... நீ பலே ஆளய்யா.. நான் எவ்வளவோ சிரமப் பட்டு மாறுவேடம் பூண்டும் ஒரே நொடியில் நீர் கண்டு பிடித்து விட்டீரே!" என்று அவரைப் பாராட்டிய அக்பர் தான் வந்த காரணத்தைக் கூறினார்.


உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்
ஒருநாள் அக்பர் தனது அவையில் அமர்ந்து இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து, "உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்? அவர்களுக்கான இலக்கணம் என்று எதனைக் கருதலாம்?" என்று கேட்டார்.
"மாபெரும் சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று சமாளித்து வெற்றி பெறும் தளபதியே மாபெரும் வீரர்!" என்றார் ஒருவர்.
"தாம் ஆயுதம் வைத்திருக்காத நிலையிலும் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும் ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெள்ளி கொள்பவனே சிறந்த வீரன்!" என்றார் இன்னொருவர்.
"போர் முனையில் போரிட்டு வீர மரணம் அடைந்த அனைவருமே வீரர்கள்தான்!" என்பது இன்னொருத்தரின் பதில்.
இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பதில் அளித்துக் கொண்டிருக்க பீர்பால் மட்டும் அமைதியாக இருந்தார். அது அக்பருக்கு ஆச்சரியத்தினை அளித்தது.
"பீர்பால். என் கேள்விக்கு என்ன பதில்?" என்றார் அக்பர்.
"மன்னர் அவர்களே... என் பதில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதனால்தான் சற்று தயக்கத்துடன் இருந்தேன். தாங்களே கேட்ட பிறகு விடையைச் சொல்லாமல் இருப்பது சரியல்ல. வீரம் என்பது வெறும் உடல் பலத்தைக் கொண்டது அல்ல. உள்ளத்தின் உயர் பண்பே வீரம் என்று நான் கருதுகிறேன். தன்னம்பிக்கையுடன் உழைத்துக் கிடைக்கும் வருவாயினை மட்டுமே தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்பவன், சுய முயற்சியுடன் தன் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றும் விதத்தில் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படுபவன் ஆகிய இவர்கள்தான் உண்மையான மாபெரும் வீரர்கள் என்று நான் கருதுகிறேன்!" என்றார் பீர்பால்.
"நீர் கூறுவது உயர்ந்த தத்துவம்தான். ஆனால் வாழ்க்கையில் சுயநல நோக்கம் இல்லாமலும் முழுக்க முழுக்க தன் உழைப்பினை மட்டுமே நம்பி வாழக்க்கூடிய ஒருவன் இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் சுயநல மன்னராகத்தான் இருப்பார்கள் என்பது என் எண்ணம். இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்ட முடியும்!" என்றார் அக்பர்.
மறுநாளே அக்பர் தன் நாட்டு மக்களுக்கு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். பொதுமக்கள் அனைவருக்கும் ஒருவார காலத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு இலவசமாக அளிக்கப்படும் என்பதுதான் அந்த செய்தி.
விருந்துக்கென விசாலமான பந்தல் அமைக்கப்பட்டு ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்காணவர்கள் அமர்ந்து சாப்பிட வசதிகள் செய்யப்பட்டன. விருந்தளிப்பு நாளும் தொடங்கியது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட வந்தார்கள். யாரும் வேலைக்கு செல்லவில்லை.
விருந்து தொடங்கி மூன்று நான்கு நாட்கள் கழிந்தன. அக்பரும் பீர்பாலும் மாறுவேடம் தரித்து குதிரைமீது நாடு முழுவதையும் சுற்றி வந்தார்கள். வீடுகள் எல்லாம் காலியாக இருந்தன. தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் மூன்று வேளள உணவைப் புசிக்க விருந்துப் பந்தலில் குழுமிக் கிடந்தனர். ஊரே செயலற்றுக் கிடந்தது.
ஒரு கிராமத்து வயல்பக்கமாக அக்பரும் பீர்பாலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயலில் வயதான முதியவர் ஒருவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உழுது கொண்டிருந்தார்.
அக்பர் அம்முதியவரை நெருங்கி, "பெரியவரே.. இந்தக் கடும் வெயிலிலும் வேலை செய்துகொண்டு இருக்கிறீரே? மன்னர் அனைவருக்கும் ஒருவாரத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை விருந்து அளிக்கிறாரே.. அதைப்பற்றி உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.
"ஐயா. அந்தச் செய்தி என் காதிலும் வந்து விழுந்தது. ஆனால் என்னைப்போல உழைப்பாளிகளுக்கு அறுசுவை விருந்து சாப்பிட ஏது நேரம்?" என்று சொன்னார் முதியவர்.
"அறுசுவை விருந்து கிடைக்கும்போது உழைப்பை சில நாள்களுக்கு ஒதுக்கி வைக்கக் கூடாதா? இந்த சந்தர்ப்பத்தினை தவற விட்டால் அப்புறம் இவ்வளவு அருமையான விருந்தினை சாப்பிட முடியாதே!" என்று கேட்டார் அக்பர்.
"ஐயா. நான் சாமான்ய உழழப்பாளி. உழைத்துச் சாப்பிட்டு பழகிப் போனவன். உழைக்காமல் கிடைக்கும் உணவு என் குடலில் செரிமானம் ஆகாது. தவிர மன்னர் ஒரு வார காலத்திற்கு மட்டும்தான் உணவு அளிப்பார். அதன்பிறகு நான் உழைத்துத்தானே சாப்பிட்டு ஆகவேண்டும்? என்னைப் பொறுத்த மட்டில் என் உழைப்புதான் எனக்கு எல்லாமே. உழைப்புக்கு மிஞ்சி உயர்ந்ததாக எதுவுமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!" என்று கூறினார் முதியவர். பின் 'ஹேய்' என்று மாட்டை அதட்டியவாறு தொடர்ந்து ஏர் உழத் தொடங்கினார்.
முதியவரின் சொற்களைக் கேட்டு மன்னர் அக்பர் பிரமித்து நின்றார். பின் பீர்பாலை நோக்கி, "பீர்பால்.. உண்மையிலேயே ...


சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்
அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.
"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.
"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!
ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.
பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.
"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.
செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.
அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.
"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.
"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.
"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.
"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.
அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..
"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"
அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.
பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.

நன்றி : மூர்த்தி முத்தமிழ்மன்றம்

Monday, October 22, 2007

தெனாலிராமன் கதைகள்

தெனாலிராமன் மறுபிறவி
தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது.
அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.
இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்.
உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.
இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.
மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.
அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.
இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.
அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.
இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.
இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.
சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.
இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.
அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.
மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.
உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.
இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்

தெனாலிராமன் வரலாறு

சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.
சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.
சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.
காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.
அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.
அரண்மனை விகடகவியானது எவ்வாறு என்பதும் அவனது நகைச்சுவையையும் இவ்வலை தளத்தில் உள்ள கதைகளால் அறியலாம்.


பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.
இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.
அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.
அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.
இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.
அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.
இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.
இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.
"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.
ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.
அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.
இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.
"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.
இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.
எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர். தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.


ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்

ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.
குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.
தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.
ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான்.என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.
தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று.
உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள்.
இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர்.
மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார்.

ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள்.
தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர்.
இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.
காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.
காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்று நம்பினார்.

Sunday, October 21, 2007

சொர்க்கத்தில் பில் கேட்ஸ்

நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே… நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.
பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ் க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு…
சரி.. கடவுளே… நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ் ந்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியே… ந்னு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!

உபையம் - சிரிப்பு.கோம்

சும்மா அங்க இங்க சுட்டது

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............
-----------------------------------------------------------------------------------------------
பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
------------------------------------------------------------------------------------------------
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமாடாக்டர்:
நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......??????????
-----------------------------------------------------------------------------------------------
இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
------------------------------------------------------------------------------------------------
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

Saturday, August 4, 2007

சிரிப்பு ஒரு மாமருந்து

சிரிப்பு ஒரு மாமருந்து சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்.அழுங்கள்...நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன் சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்.[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.]சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ஆம் ஆண்டின் இவ் ஆராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பயை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை. உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் மனவிலப்பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோ ன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின் - ஏ ' [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரித்து பாக்டீயாக்கல், வைரஸ் புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம். இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம். என்கிறார் இந்தப் பேராசிரியர்.மேலை நாடுகளில் டாக்டர்கள் நேயாளிகளுக்கு சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்திரை செய்கிறார்கள். 'நோர்மன் கசின்ஸ்' என்னும் அமொ஢க்க நாவலாசியரியர் 1983-ஆம் ஆண்டு தான் எப்படி " இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவித்தேன்.எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்காக நகைச்சுவைப் படங்கள் டி வி யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம்? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது "நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் இயல்பயைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை 'GELOTO LOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் இவைகள்.சிரிப்பு நம்முடைய இரத்ததில் அதிகப்படியான ஆக்.fன் இருப்பதற்கான தசைகள் வலுவடைகின்றன; ' இரத்த அழுத்தம்' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன. 'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன இறுக்கம் தளர்கிறது. சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது. சிரிப்பு- அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது.உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிரித்து பாருங்கள். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்."சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு.மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனதெளிவு , மனமகிழ்ச்சி என பலவிதமாக பயன்பட்டு திகழ்கிறது இந்த சிரிப்பு. நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது."பெர்னாட்" ஒரு சமயம் " உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னாலிலேயே செயல்படுகிறது " என்றார். நகைச்சுவையும்,சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது. நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்ப்பால் கதைகள், தென்னாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.அமரர் 'கல்கியின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான். அதே போல் N.S. கிருஷ்ணன் ஒரு முறை வெளியூர் சென்ற சமயம் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. வேறு காருக்காக காத்திருந்த போது , அந்த வழியாக வந்த விவசாயிகள் கார் விபத்தைக் குறித்து கேட்டபொழுது, "காருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் காரை மரத்தில் சாத்தி வைச்சியிருக்கிறோம்..." என்றாராம்.இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் வஞ்சகமில்லா நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் என்று கூறலாம். நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் " சிரித்துப் பேசக் கூடாது " என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாறவேண்டும். நகைச்சுவைய உணர்வால் மட்டுமே - பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான இடர்பாடுகளையும் எளிதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு ' கவர்ந்திழுக்கக் ' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!! இளமையான புன்னகை எனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது.கண்ணுக்குள் தரியமால் உள்ளுக்குள் ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை.தத்துவ டாக்டர்கள், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி என்கிறார்கள்உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள், சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது.செல்வத்தைத் தருகிறது.ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.? இன்றைய உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள்.நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளையதலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள். உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது. நல்ல நகைச்சுவைகளை நினைந்து நாம் தனியாக சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள் "ஆசாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும். ஆகவே,அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும், மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்."சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்திடாதே"

நன்றி - சிங்கை கிருஷ்ணன்

போட்டோ ஆல்பம்